சமூக நீதி விடுதியில் இரவு உணவாக உப்புமா மாணவர்கள் கொதிப்பு
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு, தினமும் இரவு உணவாக ரவை உப்புமா வழங்கப்படுவதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது குறித்து மாணவர்கள் சிலர் கூறியதாவது:தினமும் இரவில் சப்பாத்தி, கிச்சடி, சாப்பாடு உள்ளிட்ட உணவுகள், வழங்கப்பட்டு வந்தன.ஆனால் தற்போது, தினமும் ரவை உப்புமா மட்டுமே வழங்கப்படுகிறது.ஒரே உணவை சாப்பிட முடியாமல், பல மாணவர்கள், வெளி கடைகளில் பணம் கொடுத்து சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.இரவு நேரத்தில் உப்புமா மட்டுமின்றி இட்லி, தோசை உள்ளிட்ட வேறு உணவுகளை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.