உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு கலந்தாய்வு துவக்கம் - 10ம் தேதி வரை நடக்கும்

இதுகுறித்து கூறப்படுவதாவது: ஏற்கனவே ஜுலை 7ம் தேதி சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் துவங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து, இன்று கவுன்சிலிங் தொடங்கியது. வரும் 10ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும். * முதல் நாளான இன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். * இரண்டாம் நாளான 8ம் தேதி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும். * மூன்றாம் நாளான 9ம் தேதி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது. * இறுதிநாளான 10ம் தேதி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, பின்னர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் கவுன்சிலிங்கை, சட்டத்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு துவக்கி வைத்ததோடு, தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு, கல்லூரி சேர்க்கை ஆணையை வழங்கினார். மொத்த இடங்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் அமைந்த அரசு சட்டக் கல்லூரிகளில், மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 6,570 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 6,293 மாணவர்களின் விண்ணப்பங்கள், செல்லத்தக்கவை என்று ஏற்கப்பட்டன. கவுன்சிலிங் 10ம்  தேதி நிறைவடைந்தவுடன், வரும் 21ம் தேதி முதல், மாணவர்களுக்கு, வகுப்புகள் துவங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்