உள்ளூர் செய்திகள்

இடைநிலை ஆசிரியர்களுக்கான கணித அடிப்படை திறன் வளர்த்தல் பயிற்சி

கண்டமங்கலம்: கண்டமங்கலம் வட்டாரவள மையம் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான கணித அடிப்படை திறன் வளர்த்தல் மற்றும் கணித உபகரண பெட்டியை பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடந்தது. வட்டாரவள மைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தனர். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மரியஆரோக்கியராஜ் நோக்க உரையாற்றினார். வட்டாரவள மைய கணித ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபிநாத், மணிகண்டன், பண்ணக்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை உஷா, வி.மாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மனோகர் பயிற்சியளித்தனர். கணித ஆசிரியர் பயிற்றுனர் கோபிநாத் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்