உள்ளூர் செய்திகள்

அதிக வெண்ணெய் பிரித்தெடுக்கும் கருவி: கல்லூரி மாணவர் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: குறைந்த நேரத்தில் அதிக வெண்ணெய் பிரித்தெடுக்கும் கருவியை கண்டுபிடித்து கலசலிங்கம் பல்கலை மாணவர் சாதனை படைத்துள்ளனர். மாணவர் முத்துராஜ் கூறியதாவது: மரத்தினால் செய்த கட்டை அதில் பொருத்தபட்டுள்ள ஸ்டீல் பிளேட்கள், மோட்டார் அதை இணைக்கும் ரப்பர் பெல்ட்கள் ஆகியவைகள் இதில் உள்ளன. சுவிட்சை ஆன் செய்தவுடன் கீழ் பாத்திரத்தில் உள்ள தயிரில் மட்டையுடன் சேர்ந்த பிளேட்கள் இடது பக்கம் ஒரு நிமிடம், வலது பக்கம் ஒரு நிமிடம் என தானே திசை மாறி சுற்றுகின்றன. உடனே, வெண்ணை திரள் திரளாக மட்டையிலும், பிளேடுகளிலும், பாத்திரத்தின் ஓரங்களிலும் படிந்து விடும். 20லிட்டர் தயிரை 20 நிமிடத்தில் கடைந்து 750 கிராம் வெண்ணெயை பிரித்தெடுக்க முடியும். இக்கருவியை செய்வதற்கு 4 ஆயிரம் ரூபாய் ஆகும், என்றார். மாணவரையும், அவருக்கு ஆலோசனை வழங்கிய இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் ரஜினி, பேராசிரியர்கள் ராஜாமணி, முருகன், விஜயகுமாரையும், பல்கலை வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்