உள்ளூர் செய்திகள்

தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டி

தேவகோட்டை: தேவகோட்டை கல்வி மாவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் சண்முகநாதபுரம் பி.எஸ்.எஸ். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். பூப்பந்துப் போட்டியில் சீனியர் பிரிவில் இரு பாலரும் முதலிடம் பெற்றனர். தடகளப் போட்டி சீனியர் பிரிவில் சுவேதா 400மீ, 800மீ, மும்முறை தாண்டுதலில் முதலிடம், நீளம் தாண்டுதலில் இரண்டாமிடம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றார். அஷ்டலெட்சுமி தடை தாண்டும் போட்டியில் இரண்டாமிடம், ஜூனியர் பிரிவில் தேவதர்ஷினி 400மீ, 600 மீட்டரில் முதலிடம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்