உள்ளூர் செய்திகள்

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத உச்ச வயதுவரம்பு குறைப்பு?

தற்போதைய நடைமுறையின்படி, பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள் 30 வயது வரையிலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் 35 வயது வரையிலும் இந்த தேர்வை எழுதலாம். இந்த நடைமுறையில், மத்திய அரசு மாற்றத்தை கொண்டு வரவிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான உச்ச வயது வரம்பு, 26 ஆகவும், ஓ.பி.சி.,யினருக்கு, 28 மற்றும் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 29 ஆகவும் குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல், ஒருவர் எத்தனை முறை இந்த தேர்வை எழுதலாம் என்பதிலும் மாற்றம் கொண்வரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல், சிவில் சர்வீஸ் தேர்வுகளை, பொதுப் பிரிவினர் மூன்று முறையும், ஓ.பி.சி., பிரிவை சேர்ந்தவர்கள் ஐந்து முறையும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர் ஆறு முறையும் மட்டுமே எழுத முடியும். இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்