உள்ளூர் செய்திகள்

தலைமை ஆசிரியை மீது கல்வித்துறை விசாரணை; சி.இ.ஓ., தகவல்

கோவை: இடமாறுதல் செய்யப்பட்ட தலைமையாசிரியை மீது, துறை விசாரணை நடப்பதாக, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்தார்.தொண்டாமுத்துார் வட்டாரத்திற்குட்பட்ட, ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவி ஒருவர், உடற்கல்வி ஆசிரியர் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, சமீபத்தில் புகார் அளித்தார்.இதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பள்ளியில் உள்ள 12 ஆசிரியர்களுக்கு, போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தப்பட்டது.இப்புகாரை, போலீசாரிடம் தெரிவிப்பதற்கு முன்பே, அப்பள்ளி தலைமையாசிரியை ஜீவாஹட்சனிடம், பெற்றோருடன் வந்து புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என, சம்மந்தபட்ட மாணவி, எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.சொந்த காரணங்களால் விடுப்பில் இருந்த இத்தலைமையாசிரியர், மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், இவருக்கு மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. போக்சோ வழக்கு தொடர்பான புகாரில் தலைமையாசிரியரை, இடமாறுதல் மட்டும் செய்தது கண்டனத்திற்குரியது என்ற கருத்து எழுந்தது.இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, மாணவி புகார் அளித்துள்ளதால், தலைமையாசிரியர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்