ஆசிரியர் பணி டிப்ளமா படிப்பு ஜூன், ஜூலையில் தேர்வு
சென்னை: தொடக்க கல்வி ஆசிரியர் பணியில் சேருவதற்கான, டிப்ளமா படிப்புக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கை மற்றும் தேசிய கல்வியியல் கவுன்சில் வழிகாட்டுதலின்படி, தொடக்க பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற, டி.எல்.எட்., என்ற, இரண்டாண்டு தொடக்க கல்வி டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையின் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியே, இந்த படிப்பு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கான தேர்வை, அரசு தேர்வுகள் இயக்குனரகம் நேற்று அறிவித்தது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 21 முதல், ஜூலை, 9 வரையிலும்; இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையிலும் நடக்கும் என, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.