உள்ளூர் செய்திகள்

கணிதம் தேர்வில் சென்டம் உறுதி மாணவ, மாணவியர் பளிச்

- நிருபர் குழு -பத்தாம் வகுப்பு கணிதம் பொதுத் தேர்வு, மிகவும் எளிமையாக இருந்ததால், சென்டம் கிடைக்கும் என, மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 52 மையங்களில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கிறது. நேற்று, கணிதம் தேர்வில், 4,583 மாணவர்கள், 4,692 மாணவியர் என 9,275 பேர் எழுதினர். அதேநேரம், 134 மாணவர்கள், 91 மாணவியர் என, 225 பேர் ஆப்சென்ட் ஆகினர்.தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து வருமாறு:கேசவ் வித்யாமந்திர் பள்ளி மாணவர் கவின் பிரகாஷ்: கணிதம் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு கேள்விகள் மட்டும் சிந்தித்து விடை எழுதும்படி இருந்தது. தொடர் பயிற்சியின் காரணமாக, தேர்வை விரைந்து எழுதினேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன்.பூபேந்தர் சிங்: சிறிதும் எதிர்பார்க்காத வகையில், எட்டு மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் மிக எளிதாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். தொடர் பயிற்சி மேற்கொண்டதால் கணிதம் தேர்வை பயமின்றி எதிர்கொண்டேன். சென்டம் கிடைக்கும் என, நம்புகிறேன்.ரோஷன் அக்தர்: ஐந்து மதிப்பெண் வினாக்களில், கட்டாய வினா மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் விரைந்து தெளிவாகவும், சரியாகவும் பதில் எழுதினேன். கண்டிப்பாக இந்த தேர்வில் நுாறு மதிப்பெண் கிடைக்கும்.கந்தசாமி மெட்ரிக் பள்ளி மாணவர் சந்திரஹரி: இரண்டு மதிப்பெண் கட்டாய வினாவும், ஒரு மதிப்பெண்ணில் இரண்டு வினாக்கள், அக வினாக்களாக இருந்தது. தேர்வுக்கு முன், நன்றாக பயிற்சி எடுத்திருந்ததால், அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.பிரவீன்: ஐந்து மதிப்பெண் கட்டாய வினா, ட்விஸ்ட் செய்து இடம்பெற்றிருந்தது. ஏற்கனவே, பயிற்சி எடுத்திருந்ததால், அந்த வினாவுக்கு, எளிதாக பதில் எழுதினேன். மொத்தத்தில் கணிதம் தேர்வில் இடம்பெற்றிருந்த அனைத்து வினாக்களும் எளிதாக இருந்ததால், நல்ல முறையில் பதில் எழுதினேன். எதிர்பார்த்ததுபோல், நுாறு மதிப்பெண் கிடைக்கும்.தர்ஷனா: கணிதம் தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண்ணில், இரண்டு வினாக்கள், ஐந்து மதிப்பெண்களில் கட்டாய வினாக்கள் அக வினாக்களாக இருந்தது. 8 மதிப்பெண் வினாக்களும் மிகவும் எளிமையாக இருந்தது. அனைத்து வினாக்களுக்கும் சரியாக பதில் எழுதியுள்ளேன். முழுமதிப்பெண் கிடைக்கும்.உடுமலைஉடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தேர்வு குறித்து கூறியதாவது:ஹாரிசாமரியம்: கணிதபாடத்தேர்வு எளிமையாக இருந்தது. மகிழ்ச்சியுடன் கணக்குகளை போட்டேன். ஒரு மதிப்பெண் பகுதியில் மட்டுமே ஒரு வினா வித்தியாசமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், நன்றாக புரிந்து கொண்டதால் விடை எழுத முடிந்தது. சதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.ஹரிணி: கணிதப்பாடத்தேர்வு கடினமாக வந்துவிட்டால், கணக்குகளை போடுவதற்கு நேரம் குறைவாக இருக்கும் என பயந்தேன். காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகம் இடம்பெற்றன. விடைகளை போட்டுவிட்டு, அவற்றை சரிபார்ப்பதற்கும் நேரம் கிடைத்தது. சதம் எடுத்துவிடுவேன்.ரசிகா: இத்தேர்வு எளிமையாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்தோம். அதேபோல், மிகவும் எளிமையான வினாத்தாளாக இருந்தது. பலமுறை பயிற்சி செய்த கணக்குகள் அதிகம் கேட்கப்பட்டதால், விரைவில் விடைகளை எழுத முடிந்தது. கணக்குகள் ஈசியாக இருந்ததால் மகிழ்ச்சியாக தேர்வு எழுதினேன்.பிரியங்கா: பதட்டமில்லாமல் தெளிவாகவும், விரைவாகவும் விடைகளை எழுத முடிந்தது. ஒரு மதிப்பெண் வினாப்பகுதியில் மட்டும் இரண்டு வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன. மற்ற அனைத்து பகுதிகளிலும் சுலபமாக இருந்தன.லேகாஸ்ரீ: தேர்வு துவங்கும்போது ஒருவிதமான பதட்டம் ஏற்பட்டது. வினாத்தாளை பார்த்தவுடன்தான் நிம்மதியாக இருந்தது. பயிற்சி பெற்ற வினாக்கள் அதிகம் வந்திருந்தன. இதனால், விடையை உறுதிபடுத்தி கணக்குகளை போட முடிந்தது. கட்டாய வினாப்பகுதிகளிலும் மிக எளிமையான வினாக்கள்தான் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்