உள்ளூர் செய்திகள்

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி தீவிரம்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளிக்கு செல்லாத ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிக்க மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தமிழகத்தில் எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேலானவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில் கணக்கெடுக்கும் பணி மே, 2ம் தேதி துவங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இம்மாதம், 24ம் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடக்கும். பின்னர், எழுத, படிக்க தெரியாதவர்கள், 20 பேருக்கு ஒரு மையம் அமைத்து, எழுத படிக்க பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்