தமிழக அரசின் திட்டங்களை அறிய வாட்ஸ்ஆப் சேனல் அறிமுகம்
சென்னை: தமிழக அரசின் திட்டங்களை அறிய வாட்ஸ் ஆப் சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த ஒவ்வொரு துறையும் சமூக வலைதளங்களில் தனித்தனியாக கணக்குகள் வைத்து, அதன்மூலம் துறை சார்ந்த அறிவிப்புகள், திட்டங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த கணக்குகளை மக்கள் பாலோ செய்யும்பட்சத்தில் திட்டங்கள் குறித்து தகவலை தெரிந்து கொள்ள முடியும்.இந்த நிலையில், அதிக பயனர்கள் உள்ள வாட்ஸ்ஆப் வழியாகவும் அரசின் திட்டங்களை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்கள் அறிந்து கொள்ள TNDIPR, Govt. of Tamilnadu என்ற பெயரில் புதிய வாட்ஸ் ஆப் சேனலை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் தங்களின் வாட்ஸ்ஆப் கணக்கின் சேனல் பகுதியில் இதனை பாலோ செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.