உள்ளூர் செய்திகள்

புலம்பெயர் சான்றிதழ் பெற மோசடி செய்தவரிடம் கிடுக்கி

சென்னை: அண்ணா பல்கலையில், போலி சான்றிதழ்களை காட்டி புலம் பெயர் சான்றிதழ் பெற முயன்றவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாநிதி, 36, என்பவர், புலம்பெயர் சான்றிதழ் பெற, நேற்று முன்தினம் சான்றிதழ்களை சமர்ப்பித்து இருந்தார்.இந்த சான்றிதழ்களை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் சக்திவேல், 53, ஆய்வு செய்த போது, அவை போலி என தெரிந்தது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், கிருபாநிதியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில் அவர், திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறில் உள்ள சுவாமி அபேதானந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் டிப்ளமா படித்துள்ளார். தற்போது, ஆந்திரா மாவட்டம் இந்துார் கிராமத்திலுள்ள கியா கார் நிறுவனத்தில், மேலாண்மை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.வெளிநாட்டு வேலைக்காக புலம்பெயர் சான்றிதழ் பெற, அண்ணா பல்கலையில் மதிப்பெண், தொழில் உள்ளிட்ட 6 போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது தெரிந்தது. வழக்கு விசாரணை முழுமை அடைந்த பிறகு, கிருபாநிதி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்