எழுத்தறிவு திட்ட மையத்தில் தொடக்க கல்வி அலுவலர் ஆய்வு
சங்கராபுரம்: மல்லாபுரம் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் குடியிருப்பு மையத்தில் நடைபெற்று வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையத்தை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஜோதிமணி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மையத்தின் செயல்பாடுகள், வருகை பதிவு, அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். ஆசிரியர் பயிற்றுநர் ஸ்டாலின், உதவி ஆசிரியர் யசோதா ஆகியோர் உடனிருந்தனர்.