தினமலர் நாளிதழ் சார்பில் இன்று பாரதியார் பிறந்தநாள் விழா
கோவை: தினமலர் நாளிதழ் மற்றும் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி சார்பில், அச்சம் தவிர், வீறு கொள், வாகை சூடு எனும் தலைப்பில், பாரதியார் பிறந்த நாள் விழா கல்லுாரியின் ஜி.ஆர்.ஜி., நுாற்றாண்டு விளையாட்டு அரங்கில், இன்று நடக்கிறது.விழாவில் மனநலம், சுற்றுச்சூழல், பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், நிபுணர்கள் சிறப்புரை வழங்குகின்றனர். காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி செயலர் யசோதாதேவி வரவேற்புரை வழங்குகிறார். கோவை ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் கவிதாசன் துவக்க உரை நிகழ்த்துகிறார்.கோவை தினமலர் நாளிதழ் செய்தி ஆசிரியர் விஜயகுமார், தினமலர்: நேற்று, இன்று, நாளை எனும் தலைப்பில், நோக்கவுரை நிகழ்த்துகிறார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு எனும் தலைப்பில், சிறப்புரையாற்றுகிறார்.தொடர்ந்து, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தகவல் அமைப்பின்(இ.என்.வி.ஐ.எஸ்.,) மூத்த திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு எனும் தலைப்பில் பேசுகிறார்.பொருளாதார விழிப்புணர்வு எனும் தலைப்பில், கோவை எச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., கிளஸ்டர் ஹெட் குருவிட்டல் பேசுகிறார். கோவை கே.எம்.சி.எச்., பெண்ணோயியல், புற்றுநோயியல் நிபுணர் மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அன்பு சுபயன், 'உடல்நலம் பேணல் விழிப்புணர்வு எனும் தலைப்பில் பேசுகிறார்.மனநல மேலாண்மை விழிப்புணர்வு எனும் தலைப்பில், கே.எம்.சி.எச்., மனநல மருத்துவர் ஸ்ரீநிதி நித்யானந்த் பேசுகிறார்.பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி முதல்வர் ஹாரத்தி நன்றியுரை வழங்க உள்ளார்.