உள்ளூர் செய்திகள்

மஹா., எல்லையில் பள்ளிகள் ஆய்வுக்கு மது பங்காரப்பா தயார்

பெலகாவி: மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள கன்னட பள்ளிகளின் நிலை குறித்து அறிய, நானோ அல்லது கல்வி துறை கமிஷனரோ ஆய்வு செய்வோம், என துவக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:வட கர்நாடகா, கல்யாண கர்நாடகா பகுதி பிரச்னைகளுக்கு தீர்வு காண, காங்கிரஸ் அரசும், எனது துறையும் தயாராக உள்ளது. குறிப்பாக கல்வி துறை தொடர்பான விஷயங்களை தீர்க்க கவனம் செலுத்தி வருகிறேன்.மஹாராஷ்டிரா எல்லையில் உள்ள கன்னட பள்ளிகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.கர்நாடகாவில் 46,000 அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதில் கவனம் செலுத்தி உள்ள அரசு, இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மற்ற பள்ளியில் படிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, பள்ளிகளை நாங்கள் மூடவில்லை.மாநிலம் முழுதும் 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் உள்ள கன்னட பள்ளிகளுக்கு, கன்னட ஆசிரியர்களை தான் நியமிக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் தகவல் கிடைத்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்.இது தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தாராளமாக வரட்டும். இதை அரசியலாக்குவது எதிர்க்கட்சிகளின் இயற்கையான குணம். வளர்ச்சியில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்