தேர்வு குறித்த கலந்துரையாடலுக்கு சுமார் இரண்டரைக்கோடி பேர் பதிவு
சென்னை: பிரதமர் மோடியுடன் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு இதுவரை 2 கோடியே 79 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும் மாற்ற கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.இந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய கடந்த ஆண்டு டிச.,14ம் தேதி தொடங்கியது. ஜன.,12 முதல் 23 வரை நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என 2 கோடியே 79 லட்சத்திற்கும் அதிகமானோர் MyGov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.மேலும் மாரத்தான் ஓட்டங்கள், மீம் போட்டிகள், தெரு நாடகம், யோகா மற்றும் தியான அமர்வுகள், சுவரொட்டி தயாரிக்கும் போட்டிகள், உத்வேகம் தரும் திரைப்படத் திரையிடல்கள், மனநல பயிலரங்குகள் மற்றும் ஆலோசனை அமர்வுகள், கவிதை / பாடல் / நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.