உள்ளூர் செய்திகள்

ஓரங்கட்டப்பட்டதா டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட விழிப்புணர்வு வாகனம் ஓரங்கப்பட்டுள்ளது.மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் கிராமங்கள் தோறும் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு ஏற்படுத்துவற்காக சி.எஸ்.சி., அகாடமி மூலம் தகவல் தொழில்நுட்ப சேவைகள் துறையை மேம்படுத்தி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டப்பட்டது.இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமங்களில் வசிப்பதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதனால் டிஜிட்டல், நிதியியல் கல்வியறிவு முதற்கட்டமாக 200 கிராமங்களில் ஏற்படுத்துவற்காக விழிப்புணர்வு வாகனங்கள் வழங்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பட்டியலில் விருதுநகர் மாவட்டமும் இருப்பதால் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் முதலில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தின் 450 ஊராட்சிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவற்காக டிஜிட்டல் நிதியியல் கல்வியறிவு விழிப்புணர்வு வாகனம் வழங்கப்பட்டது.ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் ஒரு மாதமாக கலெக்டர் அலுவலக வளாகத்திலும், அருப்புக்கோட்டையிலும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு திட்டம் என்பதால் அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்