உள்ளூர் செய்திகள்

பெண் கற்ற கல்வி நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும்

சிவகாசி : பெண் கற்ற கல்வியானது நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும், என திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் அகிலா பேசினார்.சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் 2024 கல்வி ஆண்டில் படித்து முடித்த மாணவிகளுக்கான 50 வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தலைவர் திலகவதி தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் குணசிங் முன்னிலை வகித்தார். கல்லுாரி செயலர் அருணா துவக்கி வைத்தார். முதல்வர் சுதா பெரியதாய் வரவேற்றார்.திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் இயக்குனர் அகிலா 957 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி பேசியதாவது, பெண் கற்ற கல்வியானது நாட்டிற்கும் வீட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைய வேண்டும்.மாணவிகள் எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் தடம் பதித்து செல்ல வேண்டும். மாணவிகள் தங்களுக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்புகளையும் உறுதியுடன் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தொழில் முனைவோராக வளர்ந்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தேர்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் ராஜாமணி, அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வளர்மதி, தாழை புஷ்பம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்