உள்ளூர் செய்திகள்

வேண்டாமே மாடி கட்டட வகுப்பறை: பாதுகாப்பில் அலட்சியம்

திண்டுக்கல்: பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை பள்ளிக்கூடங்கள் ஓடுக்கூரையிலான வகுப்பறைகளுடன் தரைமட்டத்திலே செயல்பட்டன.மக்கள் தொகை பெருக்கம், நில மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பள்ளிகளை விஸ்தரிக்க போதிய இடம் கிடைப்பது என்பது சவாலான விஷயமாக மாறி உள்ளது.இதனால் அரசு, தனியார் பள்ளிகளில் வகுப்பறைகள் அடுக்கு மாடி கட்டடங்களில் செயல்படும் நிலை அதிகரித்து வருகிறது. ஆனால் ஏராளமான பள்ளிகளில் மேல்மாடியில் உயரம் குறைவான பாதுகாப்பற்ற சுவர்கள் உள்ளன.இவ்விடங்களில் மாணவர்களுக்குள் ஏற்படும் எல்லை மீறிய விளையாட்டு போன்ற நேரங்களில் மாணவர்கள் கவனக்குறைவாக கீழே விழும் ஆபத்து அதிகம் உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்கள் மாநில, தேசிய அளவில் எதிரொலிக்கும் பிரச்னையாக மாறி விடுகிறது. இருந்தும் இன்றளவிலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகளில் மாடி கட்டடங்களில் இருந்து மாணவர்கள் எளிதில் தவறி விழும் வாய்ப்புள்ள இடங்களாகவே இருக்கின்றன.மாவட்ட நிர்வாகம் அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்த வேண்டும். கோடை விடுமுறை காலத்தில் இதுபோன்ற பணிகளை சிரமமின்றி பள்ளி நிர்வாகங்கள் செய்து முடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்