உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை தேர்வில் குளறுபடி அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தேசிய கல்வி உதவித்தொகை தேர்வில் நடந்த குளறுபடி குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக, தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள், சில நாட்களுக்கு முன் வெளியாகின. அதில் அதிக மதிப்பெண் பெற்ற பலர் தேர்வு செய்யப்படவில்லை என்றும், அதே நேரத்தில் குறைந்தபட்ச மதிப்பெண்களைக் கூட பெறாத பலர் தேர்வு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரத்தில், இந்த அளவுக்கு அலட்சியம் காட்டப்படுவது சரியல்ல. இது சமூக அநீதி.எனவே, இதில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்