தனியார் பல்கலை சட்ட மசோதா; பேராசிரியர்கள் கடும் கண்டனம்
சென்னை: 'அரசு உதவி பெறும் கல்லுாரிகளை, தனியார் பல்கலைகளாக மாற்றும் சட்ட திருத்த நடவடிக்கையை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு வலியுறுத்தி உள்ளது.அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வெளியிட்ட அறிக்கை:தனியார் பல்கலை சட்டம், 2019ன்படி, ஏற்கனவே, ஆறு தனியார் பல்கலைகள் துவங்க, 2022ல் தமிழக அரசு அனுமதி அளித்தது.தமிழகத்தில் உயர் கல்வியில், தனியார் மயமாக்கத்தை தீவிரப்படுத்தும் முயற்சியாக, ஏற்கனவே இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளை, தனியார் பல்கலைகளாக மாற்றம் செய்து, ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவை கேள்விக்குறியாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.தனியார் பல்கலை துவங்க, 100 ஏக்கர் நிலம் தேவை என்ற அளவை குறைத்து, சட்ட திருத்தம் செய்திருப்பது, உயர்கல்வியில், வணிகமயமாக்களின் உச்சபட்சம். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, யு.ஜி.சி., நிதியுதவியுடன், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளை தனியாருக்கு தாரை வார்ப்பது, சமூக நீதிக்கு எதிரானது.எனவே, அரசு உதவி பெறும் கல்லுாரிகளை, தனியார் பல்கலைகளாக மாற்றும் சட்ட திருத்த முன்மொழிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.