தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை: தமிழக அரசு
சென்னை: தீபாவளிக்கு மறுநாள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்லத் துவங்கியுள்ளனர். மறுநாளும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தாண்டு அக்.,20 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்.,21 அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்.,25 அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது