உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையம் முன் மாணவி குடும்பத்தினர் போராட்டம்

ஸ்ரீராமபுரம்: கல்லுாரி மாணவி யாமினி பிரியா கொலை வழக்கில், கைதான விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையம் முன், குடும்பத்தினர், அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர்.பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையாவை சேர்ந்த, தமிழ் கல்லுாரி மாணவி யாமினி பிரியா, 20. ஒருதலை காதல் விவகாரத்தில் கடந்த 16ம் தேதி, கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது எதிர்வீட்டின் விக்னேஷ், 26, அவரது நண்பர் ஹரிஷ், 30, நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.தன் காதலை ஏற்க மறுத்ததாலும், வேறு யாரையாவது காதலிக்கிறாரோ என்ற சந்தேகத்திலும் கொலை செய்ததை, விக்னேஷ் ஒப்புக் கொண்டார்.கொலை நடந்த இடத்திற்கு நேற்று மதியம் விக்னேஷ், ஹரிஷை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின், போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றபோது தனக்கு வயிற்று வலி அதிகமாக இருப்பதாக, விக்னேஷ் கூறினார். மல்லேஸ்வரம் கே.சி., ஜெனரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மாலையில், யாமினி பிரியாவின் குடும்பத்தினர், உறவினர்கள், சுதந்திரபாளையா பகுதி மக்கள், ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையம் முன் திரண்டு, திடீரென போராட்டம் நடத்தினர். 'யாமினி பிரியா கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்