குழந்தைகளை நல்லா படிக்க வையுங்க துாய்மை பணியாளர்களுக்கு அறிவுரை
அன்னூர்: அன்னூர் பேரூராட்சி, இந்திரா நகரில், சமூக நீதி மற்றும் மத நல்லிணக்க விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.முகாமில், தூய்மை பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனர். மனித உரிமைகள் பிரிவு போலீஸ் எஸ்.ஐ. கனிமொழி பேசுகையில், பெண் குழந்தைகளை கண்காணித்து வளர்க்க வேண்டும்.தமிழக அரசு சார்பிலும், தாட்கோ சார்பிலும், கல்வி கற்க, தொழில் செய்ய கடன் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் படிக்க அரசு ஏற்பாடு செய்கிறது. கண்டிப்பாக குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அரசு பணிக்கு தேர்வு எழுத ஊக்குவிக்க வேண்டும் என்றார்.பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் இருப்பின் தாராளமாக தெரிவிக்கலாம், தீர்த்து வைக்கப்படும் என்றார்.சிறப்பு எஸ்.ஐ.கள் மணிகண்டன், தம்புராஜ், ரோந்து எஸ்.ஐ.கள் கனகராஜ், கருப்புசாமி பங்கேற்றனர்.