உள்ளூர் செய்திகள்

இந்திய ஏ.ஐ., ஆராய்ச்சி அமைப்பு குஜராத்தில் அமைக்க ஒப்புதல்

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் கிப்ட் சிட்டியில், 'இந்திய செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பு' நிறுவுவதற்கு, அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளார்.மத்திய அரசு, குஜராத் மாநில அரசு மற்றும் ஐ.பி.ஏ., எனும் 'இந்திய மருந்து பொருட்கள் கூட்டமைப்பு' ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது.இத்திட்டத்துக்காக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மத்திய - மாநில அரசுகள் மற்றும் தனியார் பங்குதாரர்கள் தலா 33.33 சதவீத நிதியை வழங்குவர் என்று குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் செயல்படத் துவங்கும் இந்த அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஏ.ஐ., சார்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளில் கவனம் செலுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்