உள்ளூர் செய்திகள்

கழிவுநீர் வடிகாலில் திடீர் கேஸ் கசிவு; மாணவர்கள் 10 பேர் மயக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கழிவுநீர் வடிகாலில் ஏற்பட்ட திடீர் கேஸ் கசிவால், பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெய்ப்பூரில் உள்ள மகேஷ் நகரில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில் ஏராளமானவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று மாலை திடீரென கழிவுநீர் வடிகாலில் கேஸ் கசிந்துள்ளது. இதில், 10 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.பின்னர், அவர்களை அருகே இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, மூச்சு விடுவதில் சிரமம், தாங்க முடியாத தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பயிற்சி மையத்திற்கு அருகே உள்ள கழிவுநீர் வடிகாலில் கேஸ் கசிவு ஏற்பட்டிருக்கலாம், அதேபோல, அந்த கட்டிடத்தின் மாடியில் உள்ள சமையற் கூடத்தில் இருந்து;ம புகை வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே, இந்த சம்பவம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் பயிற்சி மையத்திற்கு வெளியே மாணவர்களின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்