கலை-அறிவியல் கல்லூரிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, கலை, அறிவியல் கல்லூரிகளில், விண்ணப்ப விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியானது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர தயாராகி வருகின்றனர். மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அதிகளவு பணம் கொடுத்து, "சீட்" வாங்க முடியாத மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர முடிவெடுத்துள்ளனர். சென்னையில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில், விண்ணப்ப விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அரசு கல்லூரிகளில், 27 ரூபாய்க்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில், 50 முதல் 150 ரூபாய் வரை பல்வேறு வகைகளில் விண்ணப்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.