உள்ளூர் செய்திகள்

நீதிபதியிடம் ஆசிரியர் படிப்பு சான்றிதழ் பெற்ற மாணவி

ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றக் கிளை நீதிபதியிடம் இருந்து சான்றிதழைப் பெற்றுள்ளார் ஒரு மாணவி. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வசந்த சுஜாதா, 2007ல் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். படிப்பு முடித்த பிறகும் அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. சுமார் 40 ஆயிரம் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என்று பயிற்சி நிர்வாகம் மாணவியிடம் கூறிவிட்டது. இதை எதிர்த்து மாணவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கிளை நீதிமன்றம், உடனடியாக சான்றிதழை வழங்க உத்தரவிட்டது. எனினும் இந்த உத்தரவை பயிற்சி நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இந்த நிலையில், பயிற்சி நிலையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிலைய முதல்வர் தாமரைச் செல்வியிடம் இருந்து வசந்த சுஜாதாவின் சான்றிதழ்களை பெற்று நீதிபதி மாணவியிடம் வழங்கினார். இரண்டு ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு சான்றிதழை நீதிமன்றத்தில் பெற்றுள்ளார் இந்த மாணவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்