சித்த மருத்துவப் பாடங்களில் பழைய முறையே நீடிக்கும்
அதேப்போல, பி.எஸ்.எம்.எஸ். (சித்த மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுர்வேதம்), பி.யு.என்.எஸ். (யுனானி மருத்துவப் பட்டப்படிப்பு ஆகியவற்றின் பெயரிலும் மாற்றம் இருக்காது என்று அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைப் படிப்புகளின் பெயர்களில் அறுவைச் சிகிச்சை என்பதைக் குறிக்கும் எஸ் என்ற எழுத்தையும், அலோபதி பாடப் பிரிவில் நீக்கப்பட்டு மாற்றப்பட்ட பாடத் திட்டத்தையும் நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தும் வகையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் மேலே குறிப்பிட்ட இந்திய மருத்துவ முறைகளின் மாணவர் பேரவையைச் சேர்ந்த 14 மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டங்கள் மாற்றம் எதுவும் இன்றி பழைய முறையிலேயே தொடரும் என்றும், பட்டப்படிப்புகளின் பெயர்களிலும் மாற்றம் செய்யப்படாது என்றும் அமைச்சர் வி.எஸ். விஜய் உறுதி அளித்தார். இந்த அறிவிப்பினைக் கேட்ட மாணவர்கள் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.