உள்ளூர் செய்திகள்

சி.ஏ. மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க உத்தரவு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களை மாணவர்களுக்கு தர வேண்டும் என்று இந்திய தணிக்கையாளர் அமைப்புக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு தகவல்களை அளிக்க வேண்டும் என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய தணிக்கையாளர் அமைப்பு மேல் முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், இந்திய தணிக்கையாளர் அமைப்பு போன்றவை காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். தகவ்ல அறியும் உரிமை சட்டத்தின் படி கோரப்படும் தகவல்களை அளிக்க மறுப்பது ஏற்பதற்குடையது அல்ல. மாணவர்களின் தேர்வு விவகாரத்தில் விலக்கு அளிக்க அவர்கள் கோர முடியாது. அத்தகைய அமைப்புகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கும் அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். எனவே, தணிக்கை படிப்பு மாணவர்கள் கோரும் விடைத்தாள் நகல்கள் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்