கர்நாடகா விகாஸ் கிராமினா வங்கியில் காலி இடங்கள்
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியினால் நிர்வகிக்கப்படும் கர்நாடகா விகாஸ் கிராமினா வங்கி கர்நாடக மாநிலத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு ரீஜனல் ரூரல் வங்கியாகும். இந்த வங்கியில் இள நிலை அதிகாரி, ஆபிஸ் அஸிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிரிவுகள்: இளநிலை அதிகாரி பிரிவில் 94 இடங்களும், ஆபிஸ் அஸிஸ்டென்ட் பிரிவில் 184 இடங்களும் காலியாக உள்ளன. தேவைகள் இளநிலை அதிகாரி பதவிக்கு 21 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராகவும், ஆபிஸ் அஸிஸ்டென்ட் பதவிக்கு 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்த கணக்கீட்டிற்கு 31.07.2011 அடிப்படைத் தேதியாகும். இந்தப் பதவிகளுக்கு இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.300ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை சிண்டிகேட் வங்கியின் கிளைக்கு சென்று Karnataka Vikas Grameena Bank & Recruitment Project with Syndicate Bank, Dharwad Main Branch என்ற பெயரில் 12053170000050 (IFSC CODE : SYNB0001205) ல் செலுத்த வேண்டும். 2 பிரிவுகளுக்குமே பட்டப்படிப்பு குறைந்த பட்ச தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் எழுத, பேச மற்றும் படிக்க தெரிந்திருப்பது கட்டாயத் தேவையாகும். இதே போல் கம்ப்யூட்டர் திறமையும் கட்டாயத் தேவையாகும். முழுமையான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும். இதர விபரங்கள்:விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பின்னர் கிடைக்கும் சலானின் கவுன்டர்பாயில் பகுதியைப் பத்திரமாக வைக்கவும். இதில் உள்ள விபரங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பதவிகள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் செலுத்த, ஆன்லைனில் பதிவு செய்ய இறுதி நாள்: 23.09.2011இணையதள முகவரி: www.kvgbank.com/