வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் : கலாம்
புனே : வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என மாணவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார். மகாராஷ்டிரா, புனே நகரில் நடைபெற்ற மராத்தி கிரான்தாலயா நூலகத்தின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய கலாம் இன்று மாணவர்கள் நூலகத்தை முறையாக பயன்படுத்தாததால் அவர்களிடையே வாசிக்கும் பழக்கம், மற்றும் ஆழமாக மனதில் பதிய வைக்கும் திறனும் குறைந்துவிட்டது, என்றும் கிராமப்புற நூலகங்களில் அனைத்து விதமான புத்தகங்கள் இல்லாததால், நவீன தொழில் நுட்பமான இணையதளத்தை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.