உள்ளூர் செய்திகள்

மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளில் சேரலாம்

இந்த படிப்புகளில் சேர பிளஸ் 2-வில் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செவிலியர் உதவியாளர் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், கிண்டியில் உள்ள கிங் நிலையத்திலும் அக்டோபர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 200 ஆகும். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வங்கி வரைவோலையாக "செயலர், மருத்துவம் சார்ந்த கல்விக் குழுமம், கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிண்டி, சென்னை - 32" என்ற பெயரில் எடுத்து செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் அருந்ததி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 25-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்