உள்ளூர் செய்திகள்

சுவிஸ் உதவியுடன் இந்திய மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிர, குஜராத மாநிலங்களில் உள்ள ஐ.டி.ஐ.களில் படித்து வந்த மாணவர்களுக்கு தொழிற் கல்வி குறித்த பயிற்சி அளிக்கும் திட்டம் வெற்றிகரமாக முடிவடைந்தது குறித்து சுவிஸ் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், இத்திட்டம் மேலும் பல மாநிலங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி திட்டத்தின் கீழ், இந்தியாவில் தேர்வு செய்யப்படும் மாநிலங்களில் உள்ள ஐ.டி.ஐ.களில் படிக்கும் மாணவர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களது படிப்பிற்கு தொடர்புடைய தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனம், மாணவர்களை தேர்வு செய்யும் ஐ.டி.ஐ., திட்டத்தை செயல்படுத்தும் குழு என மூன்று அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன. இதுவரை 150 மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் தொழிற்கல்வி பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் செய்முறை பயிற்சி முதல் 3 ஆண்டுகள் பயிற்சி வரை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இப்பயிற்சியை பெறும் மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்