உள்ளூர் செய்திகள்

கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம்

சமூக, கல்வி, பொருளாதார, சுகாதார உரிமைகளை சிறுபான்மையின பெண்கள் அறிந்துகொள்ளச் செய்யும் வகையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தை மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியோடு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சயத் ஹமீத் கூறுகையில், “இத்திட்டம், விரைவில் அமுல்படுத்தப்படும். தங்களது குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டியதன் அவசியம், உடல் ஆரோக்கியத்திற்கான முறைகள் ஆகியவை குறித்து சிறுபான்மையின தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்” என்றார். கடந்த 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 13.4 சதவீதம் இஸ்லாமியர்களும், 2.3 சதவீதம் கிறிஸ்துவர்களும், 1.9 சதவீதம் சீக்கியர்களும் உள்ளனர். இஸ்லாமிய பெண்களின் எழுத்தறிவின்மை 21 சதவீதமாக உள்ளது என்று மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்நிலையில், சிறுபான்மையினருக்கு உரிய பயிற்சியும், வேலைவாய்ப்பும் அளித்து தேவையான வசதிகளை பெறச்செய்வதே சரியான மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்