உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களை திட்டியதாக கல்வி அதிகாரி மீது வழக்கு

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடமாறுதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் கடந்த மே 22ம் தேதி பாளையங்கோட்டையில் நடந்தது. அதில் பங்கேற்க பாபநாசம் கீழணை பஞ்சாயத்து யூனியன் பள்ளி ஆசிரியர்கள் கணேசன், கிங்ஸ்டன் செல்வராஜ் ஆகியோர் வந்திருந்தனர். கலந்தாய்வு கூட்டத்தை நடத்திய தொடக்க கல்வி அதிகாரி கலாராணி, கலந்தாய்வில் பங்கேற்காத ஆசிரியர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். இதில் கிங்ஸ்டன் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வி அதிகாரியின் புகாரின் பேரில் ஆசிரியர்கள் கணேசன், கிங்ஸ்டன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். அந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் கல்வி அதிகாரி கலாராணி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்திருந்தனர். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த பாளையங்கோட்டை போலீசார் கல்வி அதிகாரி கலாராணி, அலுவலக கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன், அலுவலர்கள் முருகன், சங்கரநாராயணன் ஆகியோர் ஆசிரியர்களை திட்டியதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்