உள்ளூர் செய்திகள்

அனைத்துப் பள்ளிகளுக்கும் டி.வி. செட், டி.வி.டி. பிளேயர்

மாநிலத்தில் உள்ள 35,600 பள்ளிகளிலும் மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு உதவியாக சி.டி.க்களும் வழங்கப்படும் என்று சர்வ சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் ஆர். வெங்கடேசன் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி வட்டங்களில் பள்ளிகளைப் பார்வையிட்ட அவர், இதுவரை, தர்மபுரி, கோவை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளும் டி.வி.டி. பிளேயர்களும் ஆங்கிலம் கற்பிப்பதற்கான சி.டி.,க்களும் வழங்கப்பட்டுள்ளன என்று நிருபர்களிடம் தெரிவித்தார். பள்ளிகளில் செயல்வழிக் கற்றல் முறை செயல்படுத்தப்படுவது குறித்துக் குறிப்பிட்ட அவர், பெற்றோர்களிடம் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றும் ஆசிரியர்களும் நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறார்கள் என்றார். சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூ.902.4 கோடியில் மூன்றில் ஒரு பங்கு நிதி கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டில் 9,697 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 1005 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆண்டுதோறும் ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் வெங்கடேசன் குறிப்பிட்டார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்