உள்ளூர் செய்திகள்

தேர்வில் வகுப்பாசிரியர்களே மதிப்பீடு: சென்னை பல்கலை திட்டம்!

அடுத்த செமஸ்டர் தேர்வின் போது, குறிப்பிட்ட சில முக்கிய பாடங்களுக்கு பாடம் நடத்தும் வகுப்பாசிரியர்களே மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, மதிப்பீடு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சசந்திரன் கூறினார். சென்னை பல்கலைக் கழகத்தின் செசனட் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும், நிருபர்களுக்கு பேட்டியளித்த துணைவேந்தர் ராமச்சசந்திரன் கூறியதாவது: வரும் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது, குறிப்பிட்ட சில முக்கிய பாடங்களுக்கு பாடம் நடத்தும் வகுப்பாசிரியர்களே மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, மதிப்பீடு செய்யும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்கு, மாணவர்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, மூன்று ஆண்டுகளுக்கும் இம்முறை அனைத்து பாடங்களிலும் அமல்படுத்தப்படும். இம்முறையிலான மதிப்பீட்டு முறையில், ஆசிரியர்கள், மாணவர்களிடம் பாரபட்சமற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். இம்மதிப்பீட்டில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை, குறைகளை தீர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும். பல்கலையின் செயற்திறம் அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், யு.ஜி.சி.,யிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட 32 கோடி ரூபாய், அறிவியல் துறைகளின் மேம்பாட்டிற்கு செசலவிடப்பட்டது. இத்திட்டத்தில் இந்த ஆண்டு பெறப்படவுள்ள 30 கோடி ரூபாய் 19 சமூக அறிவியல் துறைகளுக்கு செலவிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிக்கு கல்லூரியில் இடம் தராத, ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மறுமதிப்பீட்டில், தேர்ச்சி அல்லது கூடுதலாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு, மறுமதிப்பீட்டு கட்டணத்தை திரும்ப வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்றார் ராமச்சசந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்