உள்ளூர் செய்திகள்

அக்கவுண்டிங் டெக்னிஷியன்: புதிய சான்றிதழ் படிப்பு தொடக்கம்!

சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கே.பி.ஓ., பி.பி.ஓ. நிறுவனங்கள், ரீடெய்ல் துறைகளில் அக்கவுண்டன்ட் தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அக்கவுண்டிங் டெக்னிஷியன் என்ற புதிய சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்டிட்யூட் ஆப் காஸ்ட் அண்ட் ஒர்க்ஸ் அக்கவுண்டன்ட்ஸ் ஆப் இந்தியா (ஐ.சி.டபிள்யூ.ஏ.) அமைப்பின் தலைவர் குனால் பானர்ஜி தெரிவித்தார். நமது நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் அக்கவுண்டிங் டெக்னிஷியன்கள் தேவைப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த படிப்பில் பிளஸ்2 படித்த மாணவர்கள் சேரலாம். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ. பவுண்டேஷன் கோர்ஸ் படிப்புகளுக்கு உள்ள பாடங்களே அக்கவுண்டிங் டெக்னிஷியன் சான்றிதழ் படிப்பிலும் இருக்கும். அத்துடன் மேலும் இரண்டு பாடப்பிரிவுகளும் இருக்கும். இதற்குக் கட்டணம் ரூ.8 ஆயிரம். இப்படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., முயற்சிகளை மேற்கொள்ளும்.  அக்கவுண்டிங் டெக்னிஷியன் சான்றிதழ் படிப்புப் படித்த மாணவர்கள், தொடர்ந்து படித்து காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்டுகளாகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டில் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் படித்தவர்கள் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சம். காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்ட் (சி.எம்.ஏ.) படித்த அனைவருக்கும் உடனடியாக கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்து விடுகிறது. தொழில் நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தியும் அளவுக்கு சி.எம்.ஏ.,க்கள் இல்லை. எனவேதான், சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தற்போது அக்கவுண்டிங் டெக்னிஷியன் என்ற சான்றிதழ் படிப்பைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: 044-28554443, 28554326


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்