உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டுகோள்

தூத்துக்குடி: ‘அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை ஆசிரியர்கள் அதிகப்படுத்த வேண்டுமென’ பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி வேண்டுகோள் விடுத்தார். தூத்துக்குடியில் நவ.,15ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடக்கிறது. அதுகுறித்த ஆய்வுக்கூட்டம் நவ., 6ம் தேதி கோவில்பட்டியில் நடந்தது. முதன்மைக்கல்வி அலுவலர் பிறைட் சேவியர் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் பெருமாள்சாமி பேசியதாவது:அரசு பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான நியமன ஆணை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க கல்வி அதிகாரிகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை இரண்டு நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். வகுப்பறையில் புத்தக பூங்கொத்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். எல்லா வகுப்பறையிலும் ‘டிக்சனரி’ அவசியம். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,196 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்