பத்தாம் வகுப்பு கடின பாடம் நீக்கம் எப்போது?
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி., கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள கடினமான பாடப் பகுதிகள் நீக்கம் குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. கணிதம், அறிவியல் பாடங்களில் உள்ள கடினமான பாடப் பகுதிகள் நீக்கப்படும் என்று பல மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், அரையாண்டுத் தேர்வு நெருங்கும் நிலையில், இதுவரை நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. எந்தெந்த பாடங்களில் எந்தெந்த பகுதிகளை நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.