உள்ளூர் செய்திகள்

போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவர் கைது

தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதலாம் ஆண்டு பி.காம்., படிப்பிற்கு, விண்ணப்பித்திருந்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது, குச்சனூரை சேர்ந்த மதன், 20, என்ற மாணவரின் மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் சரி பார்த்தபோது, போலி என, தெரிய வந்தது. மாணவர், வணிகவியல் பாடத்தில், 40 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்திருந்தார். ஆனால், கல்லூரியில் அவர் வழங்கிய மதிப்பெண் பட்டியலில், 151 மதிப்பெண் எடுத்திருந்ததாக பதிவாகி இருந்தது. இதுகுறித்து, கல்லூரி முதல்வர் செல்லமுத்து, தேனி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தார். வீரபாண்டி போலீசார் விசாரித்து, மதனை கைது செய்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாணவனுக்கு, போலி சான்றிதழ் வழங்கியதில், வேலூர், மதுரை திருமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கும்பலுக்கு தொடர்பு உள்ளது. இக்கும்பலிடம் இருந்து பலர், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்று, கண்டக்டர், டிரைவர் உள்ளிட்ட அரசு வேலைகளில் சேர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கும்பலை நெருங்கி விட்டோம்; விரைவில் சிக்குவர். அதன் பின், மேலும் பல தகவல்கள் வெளிவரும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்