வேலை தேடுபவர்களுக்காக குறுகிய கால தையல் பயிற்சி
ஓசூர்: ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், குறுகிய கால தையல் பயிற்சி மற்றும் நிட்டிங் பயிற்சி மாணவர் சேர்க்கை வரும், 21ம் தேதி துவங்கி, ஒரு வாரம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஓசூர் அருகே மத்திகிரியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் குறுகிய கால தையல் பயிற்சி மற்றும் நிட்டிங் பயிற்சி மாணவர் சேர்க்கை வரும், 21ம் தேதி துவங்கி, ஒரு வாரம் நடக்கிறது. விருப்பமுள்ள, 18 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட பள்ளி படிப்பு முடித்தவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் காலை, 9 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நடக்கும் இந்த குறுகிய காலம் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம், 100 ரூபாய் மட்டுமே ஆகும். தகுதியும், விருப்பமுள்ளவர்கள் அசல் கல்வி சான்றுகள், ஜெராக்ஸ் கல்வி சான்றுகளுடன் வரும், 21ம் தேதி முதல் ஒரு வாரத்திற்குள் காலை 10 மணி முதல் ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை அனுகி பயிற்சியில் சேரலாம்.