உள்ளூர் செய்திகள்

பெரியகுளத்தில் புதிய செவிலியர் கல்லூரி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று மருத்துவமனைகள் மேம்பாடு மற்றும் புதிய கல்லூரி தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் பிறப்பித்த உத்தரவில்,  200 படுக்கைக்கள் கொண்ட மருத்துவமனைகள் மேம்படுத்த ரூ. 9 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ரூ. 2.42 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். மேலும், மருத்துவக் கல்லூரியில் பல்வேறு பிரிவுகளில் 21 பணியிடம் தோற்றுவிக்கப்படும். பெரியகுளத்தில் புதிய செவிலியர் கல்லூரி துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்