உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக்குகளில் புதிய குறுகிய கால படிப்புகள் அறிமுகம்!

இத்தகவலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் வி.கே. ஜெயக்கொடி தெரிவித்தார்.கல்லூரிகளில் சேர முடியாத கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டியது உடனடித் தேவை. எனவே, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற வேண்டும்.அல்லது தொழில் முனைவோராக உருவாக வேண்டும். மாணவர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு ஏற்ற வகையில் படிப்புகளை வடிவமைக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் உள்ள 92 பாலிடெக்னிக்குகளில் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கனடா சமுதாயக் கல்லூரிகள் சங்க பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். இரு நாடுகளுக்கிடையே மாணவர், ஆசிரியர் பரிமாற்றம் குறித்து தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கனடா சமுதாயக் கல்லூரிகள் சங்க தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் நைட் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்