உள்ளூர் செய்திகள்

திரு­நின்­றவூர் தனியார் கல்­லூரி மாண­வர்கள் ஆட்­சி­ய­ரிடம் மனு

திரு­வள்ளூர்: தனியார் கல்­லூரி நிர்­வாகம் மீது 100க்கும் மேற்­பட்ட மாணவர்கள் ஆட்­சி­ய­ரிடம் புகார் மனு கொடுத்­தனர். திரு­வள்ளூர் அடுத்த திரு­நின்­றவூர் பகு­தியில், ஒரு தனியார் கலைக் கல்லூரி இயங்கி வரு­கி­றது. இக்­கல்­லூ­ரியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாண­வர்கள், நேற்று முன்­தினம் மதியம் ஆட்சியர் அலுவலகத்­திற்கு வந்து, ஆட்­சியர் வீர ராகவ ராவிடம் மனு ஒன்றை கொடுத்­தனர். மனுவில் கூறி­யி­ருப்­ப­தா­வது: "நெமி­லிச்­சேரி ரயில் நிலை­யத்தில் நடை மேம்பாலம் இல்­லா­ததால் விபத்­துகள் நடக்­கி­றது. கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்­களை தகாத வார்த்தை­களால் திட்­டு­கி­றார்கள். கல்­லூரி வளா­கத்தில் குடிநீர், கழிப்­பறை போன்ற அடிப்­படை வச­திகள் இல்லை. அர­சாங்க விடுமுறை அன்று கூட கல்லூரி நடக்­கி­றது. மேலும், பல்­கலைக் கழ­கத்­தி­லேயே ஐந்து மணி நேரம் மட்­டுமே, கல்லூரி நடை­பெறும் என்று அறி­வித்து உள்­ளனர். அதற்கு மாறாக, ஏழு மணி நேரம் கல்லூரி நடத்­து­கின்­றனர். இதனால், வெகு தொலைவில் உள்ள மாண­விகள் குறித்த நேரத்தில் தங்­க­ளது வீடுகளுக்கு செல்ல முடி­வ­தில்லை." இவ்­வாறு, அந்த மனுவில் கூறப்பட்டி­ருந்­தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்