புதிய கால்நடை கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: மாணவர்கள் நிம்மதி
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரிகள், கொடுவளி உணவு தொழில்நுட்ப கல்லூரி, தூத்துக்குடி மீன்வள கல்லூரி, ஓ"ர் கோழியின தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை உள்ளன. இக்கல்லூரிகளில் மொத்தமுள்ள, 280 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து முடிந்து விட்டது. கடந்தாண்டு துவங்கப்பட்ட, ஒரத்தநாடு மற்றும் நெல்லை கால்நடை மருத்துவ கல்லூரிகளில், 80 இடங்கள் உள்ளன. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் பெற, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலிடம் பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்தது. இக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதில், நீண்ட இழுபறி நிலவி வந்தது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பித்து, கலந்தாய்வுக்கு காத்திருந்த மாணவர்கள் பரிதவித்தனர். இதையடுத்து, புதிய கல்லூரிகளுக்கு, இந்திய கால்நடை மருத்துவ கவுன்சில், நேற்று அங்கீகாரம் வழங்கியது. இக்கல்லூரிகளில் உள்ள, 80 இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. இம்மாணவர்கள், காத்திருப்போர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள, முதல், 80 இடங்களை பெற்றோர் நேரடியாக கல்லூரிகளில் சேர உள்ளனர். மேலும், கால்நடை மருத்துவ படிப்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், அக்டோபர், 3ம் தேதி, துவங்க உள்ளது.