பழங்கால முறையில் பழமைவாய்ந்த மொழியை கற்பிக்க சன்மானம்!
இதுகுறித்து, ஹரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா கூறியதாவது: சமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி படிக்கும் பழங்கால ‘குருகுல கல்வி’ முறை அமல்படுத்தப்படும். இக்கல்வி முறையில் நூறு மாணவர்களை கொண்ட குருகுலத்திற்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். 200 மாணவர்களை கொண்ட குருகுலத்திற்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமும், 300 மாணவர்களை கொண்ட குருகுலத்திற்கு ரூ.3.5 லட்சமும் ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தேர்வு எழுதும் மாணவர்களைப் பொறுத்து இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இவ்வாறு ஹூடா தெரிவித்தார். மேலும், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கான நியமனத்தில் புதிய தகுதியை நிர்ணயிக்கவும் அரியானா அரசு முடிவு செய்துள்ளது.