எடியூரப்பாவுக்கு அமெரிக்க பல்கலையின் கவரவ டாக்டர் பட்டம்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை சார்பில் ஆராய்ச்சி படிப்பிற்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பொருளாதார மந்த நிலை, பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் போன்ற பிரச்னைகளுக்கு நடுவே, டாக்டர் பட்டம் வாங்குவதற்காக எடியூரப்பா அமெரிக்கா சென்றது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த டாக்டர் பட்டம், கொடுக்கல் வாங்கல் முறை மூலம் பெறப்பட்டுள்ளதாக, சிலர் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். மைசூரு பல்கலையின் முன்னாள் செனட் உறுப்பினர் மகாதேவ் கூறுகையில், ‘மிச்சிகன் பல்கலை, மிகவும் சிறியது. அங்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் யாரும் இல்லை. அங்கு கொடுக்கப்படும் டாக்டர் பட்டம் போலியானது. அந்த பல்கலையில் கொடுக்கல் வாங்கல் முறையில் டாக்டர் பட்டம் கொடுக்கப்படுவதாக ஏற்கனவே சர்ச்சை உள்ளது’ என்றார்.