விவசாயப் பல்கலை புதிய துணைவேந்தர் தேர்வுக் குழு
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் கண்ணையன் தேர்வுக்குழுவின் தலைவராக இருப்பார். போபாலில் உள்ள இந்திய மண் அறிவியல் நிலைய இயக்குநர் ஏ. சுப்பாராவ், புதுவையில் உள்ள தோட்டக்கலைத் துறை முன்னாள் தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தி ஆகியோர் இக் குழுவின் உறுப்பினர்களாக இருப்பார்கள். விவசாயப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவிக்கு தகுதியுடைய மூன்று பேரின் பெயரை இக்குழு ஆளுநரிடம் பரிந்துரை செய்யும். விவசாயப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தரான சி. ராமசாமியின் பதவிக் காலம் டிசம்பர் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.